Fundamental theories of Carnatic Music சங்கீதம்

சங்கீதம்

செவிக்கு இன்பத்தை தருவது சங்கீதமேயாகும். லலித கலைகளுள் இது முதன்மையானது. பண்டிதர் பாமரர், விலங்குகள், பறவைகள் யாவற்றையும் பரவசப்படுத்தும் தன்மை சங்கீதத்திற்கு உண்டு.
சங்கீதத்தை பயில்வதனால் அன்பு, அடக்கம், பக்தி, சாந்தி போன்ற நற் குணங்களும் அறிவு, புத்திக்கூர்மை, கற்பனாசக்தி, போன்ற திறன்களும் விருத்தியாகின்றது.
இறைவனை ஆராதித்து நாம் பரவசமடைய உன்னத மார்க்கமாக சங்கீதம் போற்றப்படுகின்றது. நம் ஆன்ரோர்கள் நவ வித பக்தி மார்கங்களில் ஷ்ரவணம் என நாம் கேட்கும் சங்கீதத்தையும் கீர்த்தனம் என நாம் இசைக்கும் சங்கீதத்தையும் முதன்மையாக கூறியுள்ளனர். சிவபெருமான் கையில் டமருகம் ஒலியின் பிறப்பினை குறிப்புணர்த்துவதுபோல கண்ணபிரான் கையில் குழலும், சரஸ்வதி கையில் வீணையும் இருப்பதை நாம் காணலாம். இவை இசையின் தெய்வீக தொடர்பாட்டினை குறித்து நிற்கின்றது.
உலகின் பல்வேறு இன மற்றும் மொழிபேசும் மக்களிடையேயும் பாரம்பரியமான கலாச்சார பரம்பல்கள் காணப்படுகின்றது. அவற்றுள் அவரவர் கலாச்சார பிரதிமையாக இசை திகழ்கிறது. இதனால் தற்கால உலகில் கர்நாடகம் ஹிந்துஸ்தான், அரேபியா, எகிப்த், பெல்ஜியம், ஜாஸ், ரொக், மெலடி, வெஸ்டெர்ன் ஒபேரா, சீனா என பல்வேறு இசைவகைகள் நம்மிடையே பாடப்பட்டு வருகின்றது. இவ் அனைத்தையும் மேலைத்தேயஇசை கீழைத்தேயஇசை என இருவகைப்படுத்துவர்.
கீழைத்தேய இசையிலும் செவ்வியலிசை, கிராமியஇசை என இரு பிரிவுகள் உண்டு. செவ்வியலிசை என்பது தனக்கென தனி வரன்முறைகளுடன் கூடிய இசை இலக்கணங்களை கொண்டமைந்த இசை வகையாகும். அவ்வழியில் கர்நாடக இசை, தமிழிசை, பண்ணிசை போன்றவை செவ்வியல் இசைவகைக்கு உட்பட்டவையாகும்.
இவ்விதம் மொழி பிரதேசம் கலாச்சாரத்தின் அடிப்படையில் இசையினை வேறுபடுத்தினாலும் இசை என்பது யாவர்க்கும் பொதுமையான ஒலியே ஆகும்.
இதன் காரணமாகவே மொழி புரியா விடினும் ரசனை எனும் பெயரில் இசையை அனைவரும் உணரக் கூடியதாயுள்ளது. அவ் உணர்விற்கு பல தேசமக்களையும் ஒன்றிணைக்கும் சக்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

students concerts

hamsathvani's achievements