வேதத்தில் கீதமிசைத்த இராவணன்
மொழிகளுக்கு அப்பாற்பட்டு இசையின் அடிப்படை அலகுகளாக இலங்குவதுடன் ஓசையின் வகைப்பாட்டினை தொனிப்பதே ஸ்வரங்களாகும். ஆயின் இவ் ஒசை ஒலிகளின் தோற்றம் பற்றி ஆராயுமிடத்து வேதத்தினை ஆதாரமாக கொண்டே ஸ்வரங்களின் தோற்றம் விபரிக்கப்படுகின்றது.
ஆரிய முனிவர்களும்இ யோகிகளும் தாங்கள் மேலான நிலையில் கண்ட இறைக் கருத்துக்களை வேதங்களாகத் தொகுத்தனர். இவற்றுள் ரிக் வேதம் முதன்மையானது. இதன் பாராயணத்தில் உதார்த்தஇ அனுதாத்தஇ ஸ்வரீத என மூன்று அளவினைக் கொண்ட ஸ்வரங்கள் (ரி,நி,ச) ஒலித்தன. அதாவது ஆதார ஸ்வரமான ஸட்ஜமும் அதிலிருந்து ஓசையளவில் தாழ்ந்து ஒலிக்கும் நிஷாதமும்இ ஆதார ஸட்ஜத்திலும் ஓசையில் உயர்ந்து ஒலிக்கும் ஸ்வரமாக ரிஷபத்தினையும் குறிக்கும். இந்த மூன்று ஸ்வரங்களின் பின்னணியில் ரிக் வேதப்பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்த ரிக் வேதத்திலிருந்து வேள்வி இயற்றுவதற்குரிய மந்திரங்களெல்லாம் தொகுக்கப் பெற்று யசுர் வேதத்தினை உண்டாக்கினர். இதில் ரி, நி, ச ஆகிய ஒலிகளுடன் ஓசையளவில் மற்றும் ஓர் தாழ்ந்த ஒலிநிலையும் உயர்ந்த ஒலிநிலையும் இணைந்து ஐந்து ஸ்வரங்களாக (க, ரி, ச, நி, த) என இப்பாரயணத்தில் ஒலித்தன. ஆக யஜ}ர் வேதத்தில் காந்தாரம் மற்றும் தைவதம் என்ற ஸ்வரங்கள் தோன்றிற்று.
பின்னர் வேத காலத்தின் இறுதியில் வேள்வியில் பாடக்கூடிய மந்திரங்களை எல்லாம் தொகுத்து சாமம் என்று பெயரிட்டனர். சாமவேதப் பாராயணத்தின் போது மேலும் இரண்டு ஸ்வரங்கள் மத்திமம்இ பஞ்சமம் என்று ஒலித்தன. இதன் காரணமாக சாம வேதத்தில் ஏழு ஸ்வரங்களும் ஒலித்தன என்பார். பதநிஸரிகம என்ற சாமவேத பாராயண ஒலிப்புமுறையை ஒரு அடிப்படை சுர அமைப்பாக கொள்ள முடியாது. ப த நி என்ற மந்திரஸ்தாயி ஸ்வரங்கள் துவிகுண முறைப்படி இரண்டு மடங்கு அளவில் மத்தியஸ்தாயியில் ஒலித்தபோது “ச ரி க ம ப த நி ச்” என்ற சுர எல்லை ஒரே ஸ்தாயியில் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்தே ஸ்தாயி எல்லை வகைப்பாடும் நிறுவப்பட்டது.
காத்ர வீணை எனப்படும் குரலிசையில் மேற்கண்டவாறு ஸ்வரங்களை மாற்றி யூகிப்பதை காட்டிலும் கருவியின் துணைணயுடன் இதனை ஆதாராமாக நிறுவியிருக்கலாம்.
இலங்கையர் கோன் இராவணன் வீணைக் கொடி கொண்டு ஆண்டதாகவும் அகத்திய மாமுனியுடன் இசைவாதிட்டதாகவும் வரலாறு கூறிநிற்கின்றது. இதனடிப்படையில் தன் தந்தையிடம் பெற்ற வேதோபாசன சிக்ஷையினால் வேத உபாஷனையுடன் நாத உபாஷனையும் வரமாய் கிடைக்கப்பெற்றது. இசையில் ஆழ்ந்த ஞானம்மிக்க இராவணேஸ்வரனே சாமவேதத்தில் பதநிஸரிகமப என ஒலித்த ஸ்வர ஒழுங்கு த்வி குண முறைப்படி ஸரிகமபதநிஸ் என்று ஸ்தாயி வரன்முறைக்குள் வகுத்தார் என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் சாம கீதங்கள் சாம கானங்கள் என்பன எக்காலத்தில் வகுக்கப்பட்டது என்பது ஆராய்தற்குரியது.
சாம வேதத்திலிருந்து சாம கானத்தை பிறப்பித்தவர் நம் இலங்கையயர் கோன். இராமாயண காலத்திற்குமுற்பட்ட இசைக்கிரந்தமான நாரதீய மகரந்தம் என்ற நாரதமுனிவரின் இசை நூலில் ஸரிகமபதநிஸ் என்ற குறிப்போ ஸ்தாயி பற்றிய குறிப்போ காணப்படவில்லை. மேலும் இராவணனின் சமகாலத்தில் வாழ்ந்த அகத்திய முனிவரது இசைக் குறிப்புகளிலும் கூட மேற்கூப்பட்ட விளக்கங்கள் அரிதாகவேயுள்ளது.
அக்காலத்து சாம வேத்தினை ஓதும் முறையிலிருந்து பிறந்து வளர்ச்சி கண்ட இசை வடிவமே சாமகானம் என பெயர் பெற்றது. வரலாற்று சான்றென நோக்கின் இலங்கையர் கோன் இராவணேஸ்வரன் சாமகானம் பாடுவதில் வல்லவனென்றும் அதன் பயனாக இறைவனையே மகிழ்வித்தார் என்பதனையும் எடுத்துக்காட்டலாம்.
இராவணேஸன் பாடியதாய் கூறப்படும் சாம கானங்கள் ஒலிக்கும் தன்மைமயில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழலாம். இதனை தற்காலத்தில் ஓதப்படும் சாம வேதபாராயண முறை கொண்டு ஆராயுமிடத்து ஓசையடிப்படையில் மிகவும் தாழ்ந்த ஸ்வரங்களின் தொனிப்பை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. சமகால இசையிலக்கணத்தின் பிரதான அம்சமாக கருதப்படும் சில இசை அணிகள் பின்வருமாறு. ஒரு ஸ்வரத்திற்கும் மற்றைய ஸ்வரத்திற்குமான தொடுப்பு ஓசைகள் (கமகம்இ ஜாரு மற்றும் அசைவுகள்) நீடித்த ஓசை (கம்பிதம்இ தீர்க்கம்) போன்ற பிரயோகம் சாம வேத பாராயணத்தில் இனங்காண முடிகிறது.
இராவணேஸ்வரன் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்தாதக கூறப்படுகின்றது சற்று யதார்த்தபூர்வமாக சிந்திப்போமேயானால் கைலாய மலையின் கீழ் நசுக்கப்பட்ட நிலையில் ஒருவன் தனது வலியின் உச்சகட்டத்தில் தாழ்ந்து ஒலித்திருக்க வாய்ப்பில்லை ஆயினும் உரத்து சத்தமிட்டிருக்கலாம் அங்கே தாழ்ந்த ஒலிநிலையிலமைற்த பாடல்களை அவன் உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கலாம். எனவே மாறுபட்ட ஸ்தாயியின் தோற்றத்தில் சாமகானம் பிரவாகித்திருக்கக் கூடும். இது வெறும் உளவியல் சார்ந்த யூகமே. இராவணனை கற்பனை கதாபாத்திரமாகவும் இராமாயணத்தை கட்டுக்கதையாகவும் நினைப்பவர்களுக்கு இக்கருத்து அர்த்தமற்றதாய் தோன்றலாம். எது எவ்விதமாயினும் இசையின் அடிப்படையில் சாமகானத்தை ஆராய முற்படும் எவரும் இராவணனைத் தாண்டிச் சிந்திக் இயலாது. இன்று திரைப்படங்களிலும் இணையத்தளங்களிலும் பிரபலமாக ஒலித்துவரும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இராவணனால் இயற்றப்பெற்றது. ஸமஸ்க்ருத மொழியிலுள்ள ஒன்பது விதமான இலக்கணங்களுக்கமைவாக இதனை இயற்றியுள்ளார். மேலும் அதன் ஓசை தாழ்ந்து ஒலித்தலும் சந்த அமைப்பு ஒருவித துடிப்புடன் கேட்பவர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகிறது.
சாம கானம் மட்டுமன்றி அவன் தனது ஓர் கையினையும் சிரசினையும் கொய்து அதனைக் கொண்டு வீணையமைத்து இசைமீட்டியதாகவும் கதைகளுண்டு. இதற்கு சான்று பகர்வதாய் இன்றளவும் ராவணன் பெயரிலேயே
ராவண ஹத இ ராவண ஹஸ்தம்
என்று இரு நரம்புக் கருவிகள் வட இந்தியாவில் பாரம்பரியமிக்க புராதன இசைக்கருவியாக இசைத்து வரப்படுகின்றது. இவ் இசைக்ருவின் தோற்றத்திலும் இசைக்கும் விதத்தினையும் நோக்குமிடத்து சமகால வயலின் இசைக்கருவியின் செயற்பாட்டினை ஒத்ததாக காணப்படுகின்றது.
Comments
Post a Comment