Posts

Showing posts from June, 2020

Fundamental theories of Carnatic Music சங்கீதம்

சங்கீதம் • செவிக்கு இன்பத்தை தருவது சங்கீதமேயாகும். லலித கலைகளுள் இது முதன்மையானது. பண்டிதர் பாமரர், விலங்குகள், பறவைகள் யாவற்றையும் பரவசப்படுத்தும் தன்மை சங்கீதத்திற்கு உண்டு. • சங்கீதத்தை பயில்வதனால் அன்பு, அடக்கம், பக்தி, சாந்தி போன்ற நற் குணங்களும் அறிவு, புத்திக்கூர்மை, கற்பனாசக்தி, போன்ற திறன்களும் விருத்தியாகின்றது. • இறைவனை ஆராதித்து நாம் பரவசமடைய உன்னத மார்க்கமாக சங்கீதம் போற்றப்படுகின்றது. நம் ஆன்ரோர்கள் நவ வித பக்தி மார்கங்களில் ஷ்ரவணம் என நாம் கேட்கும் சங்கீதத்தையும் கீர்த்தனம் என நாம் இசைக்கும் சங்கீதத்தையும் முதன்மையாக கூறியுள்ளனர். சிவபெருமான் கையில் டமருகம் ஒலியின் பிறப்பினை குறிப்புணர்த்துவதுபோல கண்ணபிரான் கையில் குழலும், சரஸ்வதி கையில் வீணையும் இருப்பதை நாம் காணலாம். இவை இசையின் தெய்வீக தொடர்பாட்டினை குறித்து நிற்கின்றது. • உலகின் பல்வேறு இன மற்றும் மொழிபேசும் மக்களிடையேயும் பாரம்பரியமான கலாச்சார பரம்பல்கள் காணப்படுகின்றது. அவற்றுள் அவரவர் கலாச்சார பிரதிமையாக இசை திகழ்கிறது. இதனால் தற்கால உலகில் கர்நாடகம் ஹிந்துஸ்தான், அரேபியா, எகிப்த், பெல்ஜியம், ஜாஸ், ரொக்,

வேதத்தில் கீதமிசைத்த இராவணன்

Image
மொழிகளுக்கு அப்பாற்பட்டு இசையின் அடிப்படை அலகுகளாக இலங்குவதுடன் ஓசையின் வகைப்பாட்டினை தொனிப்பதே ஸ்வரங்களாகும். ஆயின் இவ் ஒசை ஒலிகளின் தோற்றம் பற்றி ஆராயுமிடத்து வேதத்தினை ஆதாரமாக கொண்டே ஸ்வரங்களின் தோற்றம் விபரிக்கப்படுகின்றது. ஆரிய முனிவர்களும்இ யோகிகளும் தாங்கள் மேலான நிலையில் கண்ட இறைக் கருத்துக்களை வேதங்களாகத் தொகுத்தனர். இவற்றுள் ரிக் வேதம் முதன்மையானது. இதன் பாராயணத்தில் உதார்த்தஇ அனுதாத்தஇ ஸ்வரீத என மூன்று அளவினைக் கொண்ட ஸ்வரங்கள் (ரி,நி,ச) ஒலித்தன. அதாவது ஆதார ஸ்வரமான ஸட்ஜமும் அதிலிருந்து ஓசையளவில் தாழ்ந்து ஒலிக்கும் நிஷாதமும்இ ஆதார ஸட்ஜத்திலும் ஓசையில் உயர்ந்து ஒலிக்கும் ஸ்வரமாக ரிஷபத்தினையும் குறிக்கும். இந்த மூன்று ஸ்வரங்களின் பின்னணியில் ரிக் வேதப்பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்த ரிக் வேதத்திலிருந்து வேள்வி இயற்றுவதற்குரிய மந்திரங்களெல்லாம் தொகுக்கப் பெற்று யசுர் வேதத்தினை உண்டாக்கினர். இதில் ரி, நி, ச ஆகிய ஒலிகளுடன் ஓசையளவில் மற்றும் ஓர் தாழ்ந்த ஒலிநிலையும் உயர்ந்த ஒலிநிலையும் இணைந்து ஐந்து ஸ்வரங்களாக (க, ரி, ச, நி, த) என இப்பாரயணத்தில் ஒலித்தன. ஆக யஜ}ர் வேதத்தில் காந்தாரம்

விபுலானந்த அடிகளார் படைப்புகளின் கண் ஒப்பியல் நோக்கு

Image
முத்தமிழ் வித்தகர் என அழைக்குமாற்றிலேயே விபுலானந்தர் தம் துறைபோய தன்மை புலனாகின்றது. விபுலானந்த அடிகளார் முத்தமிழ் வித்தகர் மட்டுமன்றி கலைகள், ஆங்கில மொழி இலக்கிய இலக்கணம், புராதன மொழிகள், பௌதீகம், கணிதம், விஞ்ஞானம், மெய்ஞானம், சமயம், உலகியல் வரலாறு, மானுடவியல், தத்துவவியல், என எண்ணிலடங்கா துறைகளை கற்றறிந்த புலமையாளர். அதுமட்டுமன்றி துறைசார் புலங்களில் அவர் அனுபவ ரீதியாக பெற்றக்கொண்ட அறிவும் கைகோர்த்தது பரந்த சிந்தனையாளராய் திகழ்ந்தார் எனலாம். இவ்விதமான பரந்த சிந்தனை போக்கு ஆய்வுலகில் அவரின் ஆய்வுப்பாங்கினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றிருக்கலாம். சமகால ஆய்வுலகில் ஒப்பியல் நோக்கு என்பது ஏதேனும் சில ஒற்றுமைகளைக் கொண்ட இருவேறு துறைகளை ஆராய்வது, அல்லது பழைமை கோட்பாடுகளுடன் தற்கால கோட்பாடுகளை ஒப்புநோக்குவது, மூலத்தின் விரிவாக்கங்களை ஒப்பிடுவது என இதுபோன்ற பல பிரமாணங்களை ஒப்பியல் நோக்காக மேற்கொள்கின்றோம். ஆயினும் அவ்வாறான பல ஆய்வுகளின் பெரும்பான்மையான முடிவுகள் கூறியது கூறலாகவே அமைகின்றது. அடிகளார் பல்துறை நிபுணத்துவம் பெற்றிருப்பினும் அவற்றினை ஒன்றன் துணையுடன் மற்றொன்றை ஆராய்ந்