Posts

Showing posts from July, 2023

ஆலய கிரியைகளில் மங்கல வாத்தியம்

நாளும் திருக்கோயில் களில்  பூசை நேரங்களில் நாதஸ்வரத்தில்  இசைக்கும் பண்கள், ராகங்கள் பற்றி என்னிடம் பல அன்பர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். எனவே அனைவரும் தெளிவு பெற நம்முடைய இசை நூல்கள், சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட அபூர்வ இசையின் ரகசியங்களை தொகுத்து இன்று நம் சித்தர்களின் குரல்.  பதிவிடுகிறேன். இலங்கையில் பண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். சிவ பூமியான இலங்கையில் இயக்கரும் நாகரும் வாழ்ந்தனர்.... பெரும்பாலும் "தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒல